நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மக்கள்!!

0
130

நுவரெலியா மாவட்டம் டயகம நகரத்திலிருந்து சந்திரிகாமம்டேவிட் பாம்  போஸ்லைன் யரவல் போன்ற பகுதிகளுக்கு செல்லும் 7 கிலோமீட்டர் தூரமான பிரதான வீதியை சீர்த்திருத்தம் செய்து கொடுக்கும் முன்வராத நுவரெலியா மாவட்டம் அரசியல் வாதிகள் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு வாக்குகள் கேட்டு ஊருக்குள் வரவேண்டாம் என இப்பிரசேசத்தை சேர்ந்த 5ஆயிரத்துக்குட்பட்ட பிரதேசவாசிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சுமார் 15 வருடங்களுக்கு மேலாக இப் பிரதான வீதி குன்றும் குழியுமாக காட்சியளிக்கின்றது.
இப்பிரதான வீதியின் சீர்கேட்டினால் இரண்டு உயிரிழப்புகளும் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பெய்த கடும் மழையின் போது வீடுவொன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் 56 வயதுடைய தாய் ஒருவர் மண்ணுக்கும் சிக்கிய நிலையில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு குறித்த நேரத்திற்கு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லமுடியாமல் பாதையிலேயே இறந்த சம்பவம் பதிவாகின இவ்வாறான சம்பவங்கள் அதிகமாகவே உள்ளன.

கடந்த அரசாங்கம் காலப்பகுதியில் இருந்த நுவரெலியா மாவட்ட அரசியல்வாதிகளிடமும் இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல்வாதிகளிடமும் பலமுறை கோரிக்கைக்கைகள் மற்றும் கடிதமூலமான வழியுறுத்துக்கள் செய்யப்பட்டும் இவைகள் புறக்கணித்து அரசியல்வாதிகள் செயற்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் ஒவ்வொரு தேர்தல் காலப்பகுதிகளிலும் எம்மிடம் வாக்கு கேட்டு வரும் நுவரெலியா மாவட்ட அரசியல்வாதிகள் இவ்வீதியை சீர்த்திருத்தம் செய்வதாக வாக்குறுதி மட்டும் வழங்கி வாக்குகளை பெற்று செல்கின்றனர்.
இம்முறை அது நடக்காது மாறாக வீதியை செப்பணிட்டு தந்தால் மாத்திரமே வாக்களிப்போம் என பிரதேச மக்கள் மேலும் தெரிவித்தனர்.
அக்கரப்பத்தனை நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here