பணத்திற்காக துப்பாக்கிச் சூடு நடத்த இளைஞர்களை வேலைக்கு அமர்த்தும் கும்பல் – அதிர்ச்சித் தகவல்!

0
4
www.cp24.com

கனடாவில் குறியாக்கம் செய்யப்பட்ட (Encrypted) செயலிகள் மூலம் பணத்திற்காக யூதப் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமெரிக்க தூதரகம் (U.S. Consulate) மீது துப்பாக்கிச் சூடு நடத்த இளைஞர்கள் வாடகைக்கு அமர்த்தப்படுவதாக றொரண்டோ பொலிஸார் (Toronto Police) அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

கிரேட்டர் றொரண்டோ பகுதியில் (GTA) நடைபெற்ற குறைந்தது 28 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு துப்பாக்கிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய ஷெல்டன் ட்ரேசி-ஸ்டீவர்ட் (Sheldon Tracey-Stewart – 18), ஜேஆன் பர்கர் (Jayon Burgher – 18) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாரா ஜாபி (Zara Jabbi – 19) என்ற இளைஞரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

கடந்த வாரம் தேடுதல் வேட்டையின் போது, மார்க் பினிஸோட்டோ (Marc Pinizzotto) என்ற பொலிஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக நிக்கோலஸ் பென்னட் (Nicholas Bennett – 19) என்பவருக்கு எதிராக முதலாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில், வாட்ஸ்அப் (WhatsApp), டெலிகிராம் (Telegram) போன்ற செயலிகள் மூலம் இளைஞர்கள் தொடர்பு கொள்ளப்படுகிறார்கள்.

தாக்குதலை நடத்திய பின், பணத்தைப் பெறுவதற்காக அதை அவர்கள் வீடியோவாகப் பதிவு செய்ய வேண்டும் என றொரண்டோ பொலிஸ் தலைமை அதிகாரி மைரன் டெம்கிவ் (Myron Demkiw) தெரிவித்துள்ளார்.

இதன் பின்னணியில் ஈரான் (Iran) அல்லது சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் இருக்கலாமா என்ற கோணத்தில், கனடிய அரச பொலிஸாரும் (RCMP) தேசிய பாதுகாப்பு பிரிவினரும் (INSET) தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here