பண்டாரவளையில் கஞ்சா செடி தோட்டம் ஒன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது!!

0
114

பண்டாரவளை  கொஸ்லந்த உனகந்த பிரதேசத்தில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு வந்த கஞ்சா செடி தோட்டம் ஒன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது இந்த கஞ்சா செடிகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த தோட்டத்தில், சுமார் 6 அடி உயரத்திலான 3000 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் பெறுமதி 20 லட்சத்துக்கும் அதிகமானது என மதிப்பிடப்பட்டுள்ளது.சுற்றி வளைப்பின் போது அந்த தோட்டத்தில் இருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பண்டாரவளை நகரில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது 120 எஸ்.வி.எஸ் போதை மருந்தும் 7020 வெளிநாட்டு சட்டவிரோத சிகரட்டுக்களும் மீட்கப்பட்டுள்ளன.

பண்டாரவளை காவற்துறை மற்றும் ஹப்புத்தளை விஷேட அதிரடிப்படையினர் இணைந்து நடாத்திய தேடுதல் நடவடிக்கையின்போது இந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here