பதுளை நகரில் உணவகம் ஒன்றுக்கு சென்ற இளைஞன் ஒருவர் திடீரென மயங்கி அங்கு அடுப்பில் வைக்கப்பட்டிருந்த எண்ணெய் தாச்சியில் விழுந்ததினால் அவர் பலத்த எரிக் காயங்களுடன் பதுளை அரசினர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார், இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
பதுளை தெல்பெத்த தோட்டத்தை சேர்ந்த ரவி வயது 18 என்பவரே ஏறி காயங்களுக்குள்ளானவர் என தெரிவிக்கப்பட்டது.
மேற்படி உணவகத்தில் வடை தயாரிக்க வைக்கப்பட்டிருந்த கொதிக்கும் எண்ணெய் தாச்சியில் வீழ்ந்த குறித்த இளைஞரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பாக பதுளை பொலிஸாசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.