பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் கவனம்

0
18

பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் ஹரினி அமரசூரிய (Harini Amarasuriya) மற்றும் மாணவர் சங்கங்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் நேற்றையதினம் (17.10.2024) நடைபெற்றுள்ளது.

இதன்போது பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் மாணவர் நலன் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்நோக்கும் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றுக்கான தீர்விணை விரைவில் வழங்குவதாக நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் தெரிவித்ததாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இக்கலந்துரையாடலில், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவை மற்றும் அதனுடன் இணைந்த பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள், கல்வி உரிமைக்கான மாணவர் சக்தி மற்றும் அதனுடன் இணைந்த பல்கலைக்கழக மாணவர் சங்கம், மற்றும் அனைத்து மருத்துவ பீட மாணவர் சங்கங்களும் கலந்து கொண்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here