பஸ் தரிப்பிடம், இனந்தெரியாத நபர்களால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதால் பெரும் அசௌகரியத்திற்குவுள்ளாகிய ஹட்டன் செனன் பிரதேசமக்கள்!!

0
102

ஹட்டன் செனன் தமிழ் வித்தியாலயத்துக்கு அருகில், மாணவர்களின் நலன் கருதி அமைக்கப்பட்டிருந்த பஸ் தரிப்பிடம், இனந்தெரியாத நபர்களால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதென சுட்டிக்காட்டும் பிரதேச மக்கள், இதனால், தாம் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களும் பொதுமக்களும் எதிர்கொள்ளும் போக்குவரத்துச் சிரமங்களை கருத்திற்கொண்டு, அவர்களுக்கு உதவும் வகையில், செனன் தமிழ் மகா வித்தியாலயத்துக்கு அருகில், பஸ் தரிப்பிடம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

கடந்த பலவருடங்காள இவ்விடத்தில் இருந்த இந்தப் பஸ் தரிப்பிடத்தை, கடந்த மாதத்திலிருந்து காணவில்லை என்றும், இனந்தெரியாத நபர்கள், பஸ்தரிப்பிட்டத்தை அப்புறப்படுத்தியுள்ளனர் எனவும் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனவே, சிரமத்தைப் போக்கும் வகையில், பஸ் தரிப்பிடத்தை மீண்டும் அமைத்துக் கொடுப்பதற்கு, அம்பகமுவ பிரதேச சபை முன்வர வேண்டும் என்று, பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here