கேரளாவின் ஆலப்புழாவில் இசை குழு ஒன்றின் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எடவா பஷீர் கலந்து கொண்டு மேடையில் பாடிக் கொண்டிருந்தபோது, திடீரென சரிந்து விழுந்து மரணம் அடைந்துள்ளார்.
கேரளாவின் வர்கலை பகுதியருகே எடவா என்ற இடத்தில் பிறந்தவ 78 வயதுடைய பஷீர், ஜேசுதாஸ் மற்றும் ரபி ஆகியோரின் பாடல்களை கேட்டு தொடக்க காலத்தில் பயிற்சி பெற்றுள்ளார்.
பள்ளி, கல்லூரியில் பல பரிசுகளை வென்றுள்ள பஷீர், பின் தனது நண்பர்களுடன் இணைந்து அனைத்து கேரள இசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் தலைவராகவும் செயல்பட்டார்.
திரை துறையில், கே.ஜே.ஜாய் இசையமைப்பில் ரகு வம்சம் என்ற படத்தில் அறிமுகம் ஆகி, வீண வாயிக்கும் என்ற பாடலை பாடினார்.
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடன் சேர்ந்து அவர் பாடிய முக்குவனே சினேகிச்ச பூதம் என்ற படத்தில் இடம்பெற்ற, ஆழித்திர மலகள் அழகின்டே மலர்கள் என்ற பாடல் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தது.