பிரித்தானியாவில் (UK) 2025 ஜனவரி 2 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய விதிமுறைகளுடன் மாணவர்களின் பராமரிப்பு நிதி வரம்பு அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை பிரித்தானிய உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன் படி, பிரித்தானியாவில் சர்வதேச மாணவராக படிப்பதற்கு திட்டமிட்டிருப்பவர்கள், படிப்பு முடியும் வரை ஒவ்வொரு மாதத்திற்கும் தேவையான வாழ்க்கைச் செலவுகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு போதுமான நிதி ஆதாரத்தை அந்நாட்டு உள்துறை அலுவலகத்திடம் நிரூபிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய பிரித்தானிய தலைநகரான லண்டனில் (London) கல்வி கற்க செல்பவர்கள் ஒவ்வொரு மாதத்திற்கும் £1,483 நிதி இருப்பை காட்ட வேண்டும்.
இதேவேளை, லண்டனுக்கு வெளியே செல்லும் மாணவர்களுக்க £1,136 நிதி இருப்பை நிதி இருப்பை நிரூபிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்படுகிறது.பிரித்தானியாவில் அன்றாட வாழ்க்கை செலவுகள் அதிகரித்து செல்லும் நிலையில், இந்த நிதி வரம்பு தவணை முறையில் திருத்தப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது
இந்த நிலையில், லண்டனில் 9 மாதங்களுக்குப் பராமரிப்பு நிதியாக 13,348 யூரோக்களை தங்களது விசா விண்ணப்பத்தின் போது நிரூபிக்க வேண்டும்.எவ்வாறாயினும், முன்னதாக இந்த நிதி அளவு லண்டனில் £1,334 மற்றும் லண்டனுக்கு வெளியே £1,023-ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.