தென்கிழக்கு பிரேசிலில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 74 பேர் காயமடைந்துள்ளதுடன் 67 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடுமையான புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதனால் சுமார் 70,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் குடிநீரின்றி தவிப்பதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன