யாழ்ப்பாண பகுதியில் பிறந்து 45 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இச்சம்பவத்தில் தவசிகுளம் – கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த துசியந்தன் தனுசியா என்ற குழந்தையே நேற்றையதினம் (17-10-2024) உயிரிழந்துள்ளது.
யாழில் பெரும் சோகம்… பிறந்து 45 நாட்களான குழந்தை துரதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு! | 45 Day Old Girl Baby Dies In Jaffnaஇச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 16ஆம் திகதி குழந்தைக்கு உடல் சுகயீனம் ஏற்பட்டதையடுத்து பெற்றோர் அன்றையதினம் 4:00 மணிக்கு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக குழந்தை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நேற்று முற்பகல் 11.00 மணியளவில் அனுமதித்துள்ளனர்.எனினும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி குறித்த குழந்தை நேற்றையதினம் மாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.குழந்தையின் இறப்புக்கான காரணம் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.