புதிய அரசாங்கத்தின் கீழ் முதல் வழக்கு நாமல் ராஜபக்சவுக்கு

0
18

இலங்கை மின்சார தனியார் கம்பனியின் நலன்புரி திணைக்களத்திற்கு சொந்தமான மொண்டேரோ ஜீப் வாகனம் ஒன்று, ஜனாதிபதி வேட்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அனுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தின் பிரசார நடவடிக்கைகளுக்கு, பழுதுபார்ப்பதற்காக அனுப்பிவைக்கப்படும் எனக் கூறி பயன்படுத்தியதாக கூறப்படுகிறது

நாமல் ராஜபக்ச தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கடந்த 27ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பொலிஸார் கோட்டை நீதவான் தனுஜா லக்மாலிக்கு அறிவித்துள்ளனர்.

அநுராதபுரத்தில் நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் கூட்டத்தின் பிரசார நடவடிக்கைகளுக்காக இலங்கை மின்சார தனியார் கம்பனியின் நலன்புரி திணைக்களத்திற்கு சொந்தமான வாகனம் பழுதுபார்ப்பு பணிக்கு அனுப்பப்படுவதாக தெரிவித்து முறைப்பாடு கிடைத்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு மற்றும் விசாரணை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்து, வாகன சாரதியின் தொலைபேசி பதிவுகளை பெற்றுக்கொள்ள கொள்ளுப்பிட்டி பொலிஸாரின் கோரிக்கைக்கு கொள்ளுப்பிட்டி பொலிஸார் அனுமதி வழங்கியுள்ளனர்.

வாகனம் பராமரிப்புக்காக கராஜ்ஜில் அனுப்பப்படும் எனவும் அதன் பின்னர் ஹொரவபதானையில் உள்ள தனது வீட்டில் வேலை இருப்பதாக கூறி அங்கு செல்வதாக சாரதி தெரிவித்ததாகவும், இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்னர் சாரதி வெளியில் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 21ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெற்ற நாமல் ராஜபக்சவின் கூட்டத்தின் பிரசாரத்திற்காக, இந்த வாகனம் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here