புதிய அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று

0
65

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையில் இன்று (19.11.2024) காலை 10 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.

21 அமைச்சர்கள் அடங்கிய புதிய அமைச்சரவை நேற்று காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டது.புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் நாளை மறுதினம் சத்தியப்பிரமாணம் செய்துக் கொள்ள உள்ளனர்.

எவ்வாறாயினும், பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.இதேவேளை, புதிய அமைச்சரவையின் நாடாளுமன்ற சபாநாயகராக (The Speaker of Parliament) நிஹால் கலப்பத்தியை (Nihal Galappaththi) நியமிக்கத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்றார்.அத்துடன், புதிய அரசாங்கத்தின் பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம் பதவியேற்றுள்ளதுடன் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கள் பிரதமரின் பொறுப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here