புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற 3500 பேருக்கு அனுமதி

0
119

இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இலங்கையில் இருந்து 3500 பேருக்கு அனுமதி கிடைத்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது.

இதற்காக சவுதி அரசாங்கத்துடன் எதிர்வரும் 9 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக
திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த முறையை போன்று வயது எல்லை தொடர்பிலான வரையறைகள் இம்முறை இல்லையெனவும் கொவிட் தடுப்பூசி தொடர்பிலான வரையறைகளும் இம்முறை தளர்த்தப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here