புலிகளின் ஈழக்கனவைத் தோற்கடிப்போம்! : ஜனாதிபதி சூளுரை

0
162

நாட்டுக்குள்ளும் வெளியேயும் உள்ள ஈழம் என்ற கனவு மற்றும் விடுதலை புலிகளின் சித்தாந்தத்தை நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இல்லாதொழிப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் வடக்கு இளைஞர்கள் மீண்டும் ஆயுதத்தை கையில் எடுக்கும் நிலை உருவாகலாம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

தெஹிவளை – கல்சிசை நகர மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்விலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். 27 வருடங்களாக வடக்கு மக்கள் முகாம்களில் இருந்தனர்.

நான் கேட்கின்றேன் உங்களால் அவ்வாறு இருக்க முடியுமா? அதனால் நாம் அனைவரும் எமது பிரச்சினை போலவே அவர்களது பிரச்சினைகளை உணர்ந்து கொள்ள வேண்டும்’ என்று ஜனாதிபதி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here