அண்மைக் காலமாக மலையகப் பகுதியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன.இவற்றிக்கு பல்வேறு காரணங்கள் காணப்படுகின்றன மலையகப்பகுதியில் தோட்டப்பகுதியில் வாழும் பெண்கள் போதியளவு கல்வி மற்றும் அடிப்படை சட்டங்கள் தொழில் முறை சட்டதிட்டங்கள் ஆகியவற்றினை அறிந்திராததன் காரணமாக பல சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
பெரும்பாலான பெண்கள் தொழில் புரியும் இடங்களிலும் வீடுகளிலும் பொது இடங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாக பல பெண்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறான வன்முறைகளை குறைத்துக் கொள்ளும் நோக்கில் பிரிடோ நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான விழிப்பூட்டும் செயலமர்வு ஒன்று டிக்கோயா ஓட்டரி தோட்ட முன் பள்ளி மண்டபத்தில் நடைபெற்றது.
பிரிடோ நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் திரு மைக்கல் ஜோக்கின் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் பெண்கள் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் பெண்களுக்கு எதிரான வாரத்தை முன்னிட்டு ஒவ்வொரு தோற்றங்களிலும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மலைவாஞ்ஞன்