பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொடபொல கிழக்கு சமுர்த்தி உத்தியோகத்தரை,தாக்கிய சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சமுர்த்தி உத்தியோகத்தரான நியமகாரம்யா குமாரி தனசேகர என்பவரே (58) அவரது அலுவலகத்தில் வைத்து இந்த தாக்குதலுக்குள்ளானார்.இதில் காயமடைந்த அவர், சிகிச்சைக்காக பேராதனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலை நடாத்தியதாகச் சந்தேகிக்கப்பட்ட இரண்டு பெண்களும் பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய வந்த வேளையில் கைதாகினர். அரச உத்தியோகத்தரை தாக்கிய குற்றச்சாட்டின்பேரில் இக்கைது இடம்பெற்றது.
50 மற்றும் 30 வயதுடைய கொடபொல பிரதேச இப்பெண்கள், உத்தியோகபூர்வ பணிகளுக்காக சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்குச் சென்றபோது,சமுர்த்தி உத்தயோகத்தருடன் முறுகல் ஏற்பட்டது. இதையடுத்தே சமுர்த்தி அதிகாரி தாக்கப்பட்டதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.