பேஷன் அழகியான மூதாட்டி- வைரலான புகைப்படத்தினால் குவியும் வாய்ப்புக்கள்

0
29

வயது என்பது வெறும் நம்பர்தான் என்பார்கள். இதற்கு ஏற்றாற்போல ஆப்பிரிக்காவின் ஜாம்பியாவில் உள்ள கிராமத்தை சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் பேஷன் அழகியாக மாறி உள்ளார்.

மார்கரெட் சோலா என்ற அந்த மூதாட்டியின் பேத்தி நியூயார்க்கில் ‘மேக்கப்’ கலைஞராக உள்ளார்.

அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய சொந்த நாடான ஜாம்பியாவுக்கு வந்திருந்து தனது பாட்டியை சந்தித்தார். அப்போது பாட்டிக்கு நவநாகரீக உடைகள் அணிவித்தும், விக் அணிவித்தும் விதவிதமாக புகைப்படம் எடுத்தார்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இதனைத்தொடர்ந்து அவருக்கு பிரபல ஹாலிவுட் இணைய தொடரிலும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here