பொகவானை தோட்டத்தில் இடம் பெற்ற கொலை சம்பவத்தில் மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்யுமாறு கோரியும் கொலை செய்த குடும்பத்தினை தோட்டத்தை விட்டு வெளியேறுமாறு கோரி மக்கள் பனிபகிஷ்கரிப்பில்.
பொகவந்தலாவ பொகவனை தோட்டத்தில் 08.03.2018. அன்று இடம் பெற்ற கொலை சம்பவத்தில் மற்றுமொறு கந்தேக நபர் இருப்பதாகவும் குறித்த சந்தேக நபரை உடனடியாக கைது செய்யுமாறு கோரியும் கொலை செய்யாத குடும்பத்தினரை தோட்டத்தை விட்டு வெளியேறுமாறு கோரியும் 10.03.2018.சனி கிழமை காலை 08 மணி முதல் 10 வரை பொகவானை தோட்டமக்கள் பனிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இந்த பனிபகிஷ்கரிப்பில் பொகவந்தலாவ பொகவனை தோட்டமக்கள் இன்று காலை முதல் தொழிலுக்கு செல்லாமல் 200கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பனிபகிஷகரிப்பு பொகவந்தலாவ பொகவனை தோட்டத்தில் இருந்து குயினா தோட்டத்திற்கு செல்லும் சந்தியில் இந்த பனிபகிஷ்கரிப்பு இடம் பெற்றமை குறிப்பிடதக்கது. இதன் போது பனிபகிஷ்கரிப்பு இடம் பெற்ற இடத்திற்கு பொகவனை தோட்ட முகாமையாளர் மற்றும் பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் சென்ற போது இந்த கொலை சம்பவத்தில் மற்றுமொரு சந்தேக நபர் இருப்பதாகவும் அந்த நபரை கைது செய்யுமாறு கோரியும் வழியுருத்தினர்.
இந்த கொலை சம்பவத்தில் மற்றுமொறு சந்தேக நபர் காணபட்டால் பொதுமக்கள் பொலிஸாருக்கு அறிவித்தால் அந்த நபரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளபடுமென பொகவந்தலாவ பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி கே.சி.தர்மபிரிய தெரிவித்தார்.
இதே வேலை கொலை செய்யபட்ட குடும்பத்தினரை தோட்டத்தில் வெளியேற்றுவதற்கு தோட்டநிர்வாகம் நடவடிக்கை எடுக்கபடுமென தோட்டமுகாமையாளர் தெரிவித்த பிறகு மக்கள் பனிபகிஷ்கரிப்பை கைவிடப்பட்டமை குறிப்பிடதக்கது.
பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்