0.02903800டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரினால் தாக்கப்பட்டு 55 வயதுடைய எஸ். ராஜேந்திரன் என்பவர் டயகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டுமென இ.தொ.காவின் உபதலைவர் சச்சுதானந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவில் நிகழ்வொன்றில் குறித்த தோட்டத்தை சேர்ந்த இரு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும் எஸ்.ராஜேந்திரன் என்பவர் பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காக வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரினால் தாக்கப்பட்டு டயக ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இப்பிரச்சனையை கேள்வியுற்ற குறித்த பகுதியின் பிரதேச சபை உறுப்பினர் டி.சுப்ரமணியம் உடனடியாக களத்திற்கு சென்று இந்நிலை குறித்து ஆராய்ந்துள்ளார்.
இந்நிலை தொடர்பில் இ.தொ.காவின் உபதலைவர் சச்சுதானந்தனுக்கு அறிவித்த நிலையில் இப்பிரச்சனை தொடர்பில் முழுமையாக விசாரித்த பிறகு இப்பிரச்சனையை இ.தொ.கா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் நிதிச்செயலாளர் மருதபாண்டி உடன் அறிவித்த நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டயகம பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி உறுதியளித்துள்ளார்
பொலிஸ் உத்தியோகத்தரால் தாக்கப்பட்ட நபருக்கு நியாயமான நீதிவேண்டுமென டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு மக்கள் வேண்டுகோள் விடுத்து பணிபகீஸ்கரிப்பையும் முன்னெடுத்துள்ளனர்.மேலும் குறித்த பிரச்சனைக்கு நியாயம் கிடைக்காதவிடத்து சட்ட ரீதியான அனைத்து விடயங்களையும் முன்னெடுக்க உள்ளதாகவும் இவ்வாறு அதிகாரத்தில் உள்ளவர்கள் அசமந்த போக்கினாலும் அதிகார திமிரில் ஈடுபடுவதையும் வண்மையாக கண்டிப்பதாக இ.தொகா உபதலைவர் சச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.