பொலிஸ் கோரா மோப்பநாயின் இறுதிக்கிரியை இன்று- புகைப்படங்கள் உள்ளே!

0
129

பொலிஸ் கோரா மோப்பநாய் புற்றுநோயினால் உயிர் இழந்துள்ளதாக பிரேத பரீசோதனையில் இருந்து தெரியவந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவிப்பு.
அட்டன் பொலிஸ்வலயத்தில் உள்ள கோரா என்ற மோப்பநாய் புற்றுநோயினால் உயிர்இழந்துள்ளதாக பிரேத பரீசோதனையில் இருந்து தெரியவந்துள்ளது. கோரா மோப்பநாயிற்கான பிரதேச பரீசோதனை பேராதெனிய பல்கலைகழகத்தில் இடம் பெற்றபோதே இதனை அறிவிக்கபட்டது.

கடந்த 29ம் திகதி செவ்வாய் கிழமை கண்டி பகுதியில் உள்ள மோப்ப நாய்களின் பயிற்சி நிலையத்திற்காக அழைத்து செல்லபட்டபோதே திடிரென பயிற்சிநிலைததில் வைத்து உயிர் இழந்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே இந்த கோரா மோப்ப நாயின் இறுதிகிரியைகள் 31.05.2015 வியாழகிழமை மாலை 04.15மணிக்கு இடம்பெற்றது. அட்டன்
பொலிஸ்வலயத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ரவிந்திர அம்பேபிட்டிய தலைமையில் இடம்பெற்ற இந்த இறுதிகிரியை நிகழ்வில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தசநாயக்க மற்றும் அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

22 23 26 28 33

இதேவேலை கோர மோப்ப நாயின் இறுதிகிரியைகளில் சர்வமத அனுஸ்டானங்களும் இடம் பெற்றமை குறிப்பிடதக்கது.

கோரா மோப்பநாய் அட்டன் பொலிஸ் வலய பகுதியிலும் சிவனொளி பாதமலை பருவகாலத்தின் போது அதிகளவிலான போதை பொருளை கொண்டு வந்த சந்தேக நபர்களை கைது செய்வதற்கு உதவி வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது. இதேவேலை இந்த கோரா என்ற மோப்ப நாயின் வயது எட்டு எனவும் அம்பாரை மட்டகளப்பு பேலிகொட பண்டாரவல அட்டன் ஆகிய
பகுதிகளை சேவையாற்றியிருந்தமையும் குறிப்பிடதக்கது.

KORA (5)

மேலும் பொலிஸ் மரியாதையுடன் கோராவுக்கு இறுதிக்கரியைகள் நடைப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

எஸ் .சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here