போதைப் பொருள் விற்பனையில் பாடசாலை மாணவன் – மடக்கி பிடித்த விசேட அதிரடிப்படையினர்

0
98

ஹொரணையில் பாடசாலை மாணவர் ஒருவரின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப் பொருட்களை விற்பனை செய்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (5) மில்லனிய மற்றும் பரகஸ்தோட்டை பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளர்.

சந்தேகநபர்களிடம் 13 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 120 போதை மாத்திரைகள் இருந்ததாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், 18 வயதுடைய பாடசாலை மாணவன் ஊடாக மாணவர்களுக்கு இந்த போதைப்பொருள் விற்பனை செய்துள்ளதாக விசாரனைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மெலதிக விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் சந்தேகநபர்கள் மல்லன்யாவை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here