உக்ரைன் மீதான தாக்குதலில் இருந்து தப்பி ஓட நினைக்கும் தமது இராணுவ வீரர்களை ரஷ்யா சுட்டு வீழ்த்தி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
உக்ரைன் மீதான அதிபர் விளாடிமிர் புடினின் சிறப்பு இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவளிக்காத எந்தவொரு இராணுவ வீரரையும் சுட்டுக் கொல்ல Rosgvardia படை அல்லது தேசிய காவலர் பயன்படுத்தப்படுவதாக உக்ரைன் பொதுப் பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய இராணுவ ஒழுக்கத்தைப் பேணவும், பணியாளர்களிடையே பீதி பரவுவதை தடுக்கவும்” போரை விட்டு வெளியேற அல்லது உக்ரைனியப் படைகளிடம் சரணடையத் திட்டமிடும் எந்தவொரு வீரரையும் ரஷ்யா சுட்டு வீழ்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனிய பொதுப் பணியாளர்களின் அறிக்கைகளின் அடிப்படையில், உக்ரைனில் போரை கைவிட எண்ணிய ஆறு படைவீரர்களை ரோஸ்க்வார்டியா துருப்புக்கள் சுட்டுக் கொன்றதாக தெரியவந்துள்ளது.
உக்ரைனின் கூற்றுப்படி பெப்ரவரி 24, 2022 அன்று போர் தொடங்கியதிலிருந்து புடினின் இராணுவம் 111,000 க்கும் மேற்பட்ட துருப்புக்களை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரோஸ்க்வார்டியா என்பது ரஷ்யாவின் சிறப்பு காவல்துறை பிரிவு இது இராணுவத்திலிருந்து தனித்தனியாக உள்ளது,மேலும் இவை கிளர்ச்சிக்கு எதிரான பணிகளில் பயிற்சி பெற்றுள்ளன மற்றும் முன்னேறும் துருப்புகளுக்கு பின்னால் செயல்படுகிறது.
கடந்த ஆண்டு இறுதியில் பிரித்தானிய உளவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், போர்க்களத்தில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் எந்த ரஷ்ய துருப்புக்களுக்கும் தடையாக செயல்பட ரோஸ்க்வார்டியா துருப்புக்கள் “தடை வீரர்களாக” பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.