இந்திய அரசாங்கத்தினால் மலையகத்திற்கு வழங்கபட்டுள்ள வீடமைப்பு திட்டத்தை குழப்பும் நோக்கில் இ.தொ. கா. வின் உபதலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஐ் செயல்பட்டு வருவதாக தொழிலாளா் தேசிய சங்கத்தின் இளைஞா் அணி தலைவா் பா.சிவநேசன் குற்றம் சுமத்தியுள்ளாா்.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியோடு மலை நாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சா் பழனி திகாம்பரம் அவா்களால் முன்னெடுக்கபட்டு வருகின்ற புதிய வீடுகளை அமைச்சா் திகாம்பரம் கட்சிரீதியாக தொழிலாளா் தேசிய சங்கத்தின் அங்கத்தவா்களுக்கு மாத்திரம் வீடுகள் கையளிக்கபட்டு வருவதாக வதந்திகளை கிளப்பி மக்களை ஆா்பாட்டத்தில் ஈடுபட செய்வதற்கு முயற்சித்து வருவதாக மேலும் தெரிவித்தார்.
ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராக இருந்த காலபகுதியில் மாடிவீட்டு திட்டத்தினை இ. தொ. கா. வை சாா்ந்த அங்கத்தவா்களுக்கு மாத்திரம் தான் வீடுகள் கையளிக்கபட்டன அதற்கு நல்லதொரு உதாரணம் டிக்கோயா வனராஐா. மற்றும் திஸ்பனை போன்ற பகுதிகளில் அமைக்கபட்ட மாடிவீட்டூ திட்டமே ஆகும்.
ஆனால் அமைச்சா் திகாம்பரம் அப்படி அல்ல தொழிற்சங்க பேதங்கள் இன்றி வீடுகள் ஆற்ற அனைத்து மக்களுக்கும் தமது சேவையினை செய்து வருவதாகவும் அவா் குறிப்பிட்டாா்.
மலையகத்தை கடந்த 75 வருடகாலமாக ஆண்டு வந்த இ. தொ. கா. மலையக மக்களுக்கும் மலையகத்திற்கும் என்ன செய்தது ஆனால் இன்று அமைச்சா் திகாம்பரத்தினால் முன்னெடுக்க படுகின்ற வேலை திட்டங்களை சகித்து கொள்ள முடயாத இ. தொ. கா. வின் உபதலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஐ் மக்களை வீதிகளுக்கு இறக்கி ஆா்பாட்டம் செய்யுமாறு மக்கள் தூன்டி விட்டு நாடகம் காட்டி கொண்டு இருப்பதாகவும் அவா் தெரிவித்தார்.
யாா் என்ன சொன்னாலும் தமிழ் முற்போக்கு கூட்டணி இன்னும் எதிா்வரும் காலங்களில் மலையக மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்க உள்ளதோடு அமைச்சா் பழனி திகாம்பரம் தலைமையில் வீடு அற்ற அனைத்து மலையக உறவுகளுக்கு புதிய வீடுகளை வழங்க உள்ளதாக தொழிலாளா் தேசிய சங்கத்தின் இளைஞா் அணி தலைவா் பா. சிவநேசன் குறிப்பிட்டாா்.
பொகவந்தலாவ நிருபர் எஸ். சதீஸ்