மக்கள் வாழ்வதற்கு இன்று பயந்து கொண்டிருக்கிறார்கள்

0
103

மக்கள் வாழ்வதற்கு இன்று பயந்து கொண்டிருக்கிறார்கள். கடைக்கு சாமான் வாங்கச்செல்வதற்கு பயந்து கொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால் அந்தளவுக்கு வாழ்வதற்கான பெரிய சவால் ஏற்பட்டு விட்டது. நாங்கள் எங்களுடைய தாய்மார்கள் மலையகத்திலே இருக்கின்ற தாய்மார்கள் உழைத்ததன் விளைவாகவே இந்த நாடு இப்படியாவது இருக்கின்றது. வெளிநாட்டிலே கோப்பை கழுவி வெளிநாட்டிலேயே ஏச்சில் வேண்டி உழைத்து அனுப்புகின்றார்களே அந்த டொலர்களை அதை வைத்துக்கொண்டு’ இங்கே பாராளுமன்றத்தினையும் ஏனைய களியாட்ட விழாக்களையும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். பிரிடோ நிறுவனத்தின் செயத்திட்ட இணைப்பாளர் எஸ்.கே.சந்திரசேகரன் தெரிவித்தார்.

மலையகப்பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று உழைத்து எமது நாட்டிற்கும் வீட்டிற்கும் தங்களது பிள்ளைகளின் கல்விக்காக பெருமை சேர்த்த தாய்மார்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று நேற்று (22) ம் திகதி அக்கரப்பத்தனை மன்றாசி பகுதியில் இடம்பெற்றது.இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிலைமை மாறவேண்டும் அதற்காகதான் நீங்கள் உங்கள் பிள்ளையை பெற்றெடுத்திருக்கின்றீர்கள். இந்த நிலைமை மாறுவதற்கு என்ன செய்யவேண்டும். நாட்டை விடுங்கள் உலகத்தை விடுங்கள் எங்களது சமூகத்தில் நாம் என்ன செய்யவேண்டும் என்று பாருங்கள்.

இங்கே இருக்கின்றவர்கள் உலக தொழிலாளர் தினத்திலே என்று பொய்சொல்லக்கூடாதோ என்று தொழிலாளர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டுமோ அன்று மிகப்பெரிய பொய்யைச்சொல்லி எம்மை ஏமாற்றுகிறார்கள். நாங்கள் ராஜபக்ச குடும்பத்தின் உறவை அறுத்துக்கொள்வோம் என்று சொன்னவர்கள் இன்று அவர்கள் மடியிலே படுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஏன் இதைப்பற்றி யாராவது கேள்வி கேட்டிருப்பார்களா?. அந்த அளவுக்கு வெளியில் இருப்பவர்கள் மடையர்கள் என்று யோசித்தததால் தான் அவர்களுக்கு வே;ண்டிய மாதிரி கதைகளையும் கருத்துக்களையும் சொல்லிக்கொண்டு போகின்றார்கள். அவர்களுக்கு தெரியும் யாரும் பேசமாட்டார்கள் நாங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் எதைவேண்டுமானாலும் சொல்லலாம் என்று ஏனென்றால் எம்மை முட்டாள்களா கருதிக்கொண்டு இருக்கிறார்கள்.

இன்று அந்நிய செலவாணியை கொண்டுவருகின்ற துறைக்கு ஊக்கத்தை கொடுத்து மேலும் அந்நிய செலவாணியை கொண்டுவர தோன்றவில்லை. அப்படி தோன்றியிருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது. எங்கு பார்த்தாலும் தேயிலை மலைகளாக இருந்த இடங்கள் இன்று காடுகளாக மாறியிருக்கின்றன. தொழிலாளர்கள் வேலைக்கு சந்தோசமாக செல்வதில்லை. அட்டைக்கடி, அந்தக்கடி இந்தக்கடி என்றெல்லால் வாங்கி தான் அவர்கள் கொடுக்கவேண்டிய சம்பளத்தை பெறக்கூடியதாக உள்ளது.

அந்தளவு மோசமான நிலைக்கு கொண்டுவந்து விட்டனர். காரணம் அதற்கு நாங்கள் வாயை மூடி மௌனிகளாக இருப்பது தான்.. 1000 ரூபா சம்பள உயர்வு வேண்டி கருப்புக்கொடியை ஏந்திக்கொண்டு ஊர்வலம் போவது பெரிதல்ல. சிந்தனை ரீதியாக சிந்தித்திருக்க வேண்டும். இந்த கோரிக்கை என்னுடைய போராட்ட உணர்வு, அந்த ஊர்வலத்திலே செல்கின்றவர்களின் உணர்வு அதை இங்கே இருக்கின்ற அரசியல்வாதிகள் விளையாட்டாக எடுத்துக்கொண்டு அங்கே போய் பேசுகின்றோம் பேசுகின்றோம் என்று ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் தான் 1000 ரூபாய் கிடைக்கவில்லை 1000 ரூபாய் கிடைத்த மாதிரியான பம்மாத்து.

அதை எண்ணி நாங்கள் பெருமையடைகின்றோம். ஏனென்றால் எங்கள் மத்தியிலேயே தொழிற்சங்க அரசியல் இருக்கின்றது. நாங்கள் அந்த தொழிற்சங்கம் இந்த தொழிற்சங்கம் அவர்கள் என்ன சொல்கின்றார்களோ அதுதான் சரி இவர்கள் என்ன சொல்கின்றார்களோ அதுதான் சரி என தாளம் போட்டுக்கொண்டு இருப்பவர்களாக இன்று மாறிக்கொண்டு இருக்கின்ற ஒரு நிலைப்பாடு தான் இருக்கின்றது.

நீங்கள் இந்த விடயத்தை வெற்றிகரமாக அடைவதற்கு இதுதான் வழி என்று அந்தவழியை நாங்கள் சொல்லித்தரும் அளவிற்கு எங்களிடம் ஆற்றலில்லை, ஞானமில்லை. இந்த நாட்டிலே இருக்கின்ற கொள்கைகள் , பாராளுமன்றத்திலே இருக்கின்ற யாப்புக்கள் அதிலே என்ன சொல்லியிருக்கின்றார்கள் என்று கூட எங்களுக்கு தெரியாது. சில அரசியல்வாதிகளுக்கு கூட இது தெரியாது. இந்த நாட்டிலே இருக்கின்ற இளைஞர்கள் பேசுகின்றார்கள் நம்மைத்தவிர நாம் பேசவில்லை. அந்த யாப்பைக் கொண்டுவாருங்கள் அதில் எமது சமூகமாற்றத்திற்கு ஏதாவது சொல்லியிருக்கின்றதா இல்லாவிட்டால் அதைச்சேருங்கள் என்று சொல்லக்கூட எமக்கு ஞானமில்லை நாம் இன்று ஓர் கற்பனை உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் ஆகவே இந்த இளைஞர்கள் மாறவேண்டும்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here