அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயாவில் இருவேறு பகுதிகளில் 05.05.2018 மாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற மண்சரிவில் இரண்டு குடியிருப்புகள் சேதமாகியதுடிக்கோயா தரவளை கீழ் பிரிவு பகுதியில் மூன்றாம் இலக்க லயன் தொடர் குடியிருப்பில் குடியிருப்பாளர் ஒருவரின் சமையறை முற்றாக சேதமாகியுள்ளதுடன் சமையால் உபரணங்களும் சேதமாகியுள்ள அதே வேலை வனராஜா மேல் பிரிவிலும் தொடர் குடியிருப்பின் பின்புமுள்ள மண்மேடு சரிந்ததில் குடியிருப்பொன்று பகுதியளவில் சேதமாகியுள்ளது.
கடந்த சில தினங்களாக மழையகப்பகுதிகளில் கடும் மழை பெய்து வருகின்ற நிலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ள குறித்த பகுதியில் தொடர்ந்து மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.
பாதிப்புக்குள்ளான குடியிருப்புகளை மத்திய மாகாணசபை சபை உறுப்பினர் ஸ்ரீதரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ராம் தொழிலாளர் தேசிய சங்கத்தின் டிக்கோயா மாவட்ட தலைவர் ஆகியோர் பார்வையிட்டதுடன் மண்சரிவு அபாயம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட செயலாளர் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினரின் கவனத்திற்கு ஸ்ரீதரன் கொண்டு சென்றுள்ளார்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்