மண்ணெண்ணை பெற்றுக்கொள்வதற்காக இன்று 26 அதிகாலை முதல் ஆயிரக்கணக்கானோர்; எண்ணை நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
ஹட்டன் பகுதியில் உள்ள எண்ணை நிரப்பு நிலையம் ஒன்றில் இன்று மண்ணெண்ணை பெற்றுக்கொள்வதற்காக அதிகாலை மூன்று மணிமதல் சுமார் 3000 இற்கும் மேற்பட்ட மக்கள் ஹட்டன் சிபெட்கோ எண்ணை நிரப்பு நிலையத்திலிருந்து மல்லிகைப்பூ சந்தி வரை நின்றிருந்தனர்.
இதன் போது மக்கள் வரிசை கிரம முறையிலிருந்து முந்திக்கொண்டு எண்ணை பெற்றுக்கொள்ள முயற்சித்தமையினால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.அதனை தொடர்ந்து பொலிஸார் மற்றும் இரானும் இணைந்து நிலைமையினை சரி செய்தனர்.
குறித்த எண்ணை நிரப்பு நிலையத்தில் நின்றிருந்த மக்கள் தொகையினை காரணமாக கொண்டு ஒருவருக்கு 300 ரூபாவுக்கு மாத்திரம் எண்ணை பெற்றுக்கொடுப்பதாக அறிவித்திருந்தனர்.இதனால் பலர் பல மணித்தியாலங்கள் நின்றிருந்தும் ஓரிரு நாளைக்கு சமைப்பதற்கு போதுமான எண்ணை பெற்றுக்கொடுக்கப்படுகின்றன. இதனால் மக்கள் தங்களது வேலைகளையும் விட்டுவிட்டு வரிசைகளில் நிற்க வேண்டியுள்ளதாக பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மற்றுமொருவர்கருத்து தெரிவிக்கையில் இந்த நாட்டில் இன்று மக்கள் வாழ்வதற்காக போராடி வருகின்றனர். ஆனால் ஆட்சியாளர்களுக்கு எவ்வித கவலையும் கிடையாது இன்று கேஸ் இல்லை மண்ணெண்ணைக்கு வந்தால் நீண்ட வரிசை அது மட்டுமல்லாமல் 300 ரூபாவுக்கு தான் தருகிறார்கள். அதுவும் இன்னமும் வரவில்லை நாங்கள் இப்போது 6 மணித்தியாலங்கள் வரிசையில் நிற்கிறோம.; வேலைக்கும் போக முடியாது நாட்டை செய்ய முடியாவிட்டால் யாரிடமாவுது கொடுத்து விட்டு வீட்டுக்கு செல்லுங்கள், பிரதமர் வந்தால் பிரச்சினை தீரும் என்று பார்த்தால் இன்று வரிசை அதைவிட அதிகமாக உள்ளது என தெரிவித்தார்.
இன்றைய தினம் கொட்டகலை ஹட்டன் நோர்வூட் உள்ளிட்ட பல எண்ணை நிரப்பு நிலையங் நிலையங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மண்ணெண்ணை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்றிருந்தனர்.
இதே வேலை இன்று டீசல் பெற்றுக்கொள்வதற்காகவும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதனை காணக்கூடியதாக இருந்தன.
மலைவாஞ்ஞன்