உணவுப் பொதி ஒன்றின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
பொலிதீன் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டதை அடுத்து இந்த விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
லஞ்ச் சீட்” பயன்படுத்தி பொதி செய்து வழங்கப்படும் உணவுகளில் விலை அதிகரிப்பு சம்பந்தமாக நாளைய தினம் கூடி தீர்மானிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.