மனைவியின் மூக்கை அறுத்த கணவனால் பரபரப்பு

0
33

தனது தாய் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று மனைவி கூறியதை அடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தால் கணவன், மனைவியின் மூக்கை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம்(uttar pradesh) மாநிலத்தில் உள்ள ஹர்தோய், பனியானி பகுதியை சேர்ந்தவ ராகுல் என்பவரே இவரின் மனைவியான அனிதா (வயது 25) என்பவரின் மூக்கை அறுத்தவராவார்.

ரக்சா பந்தன் பண்டிகையை முன்னிட்டு தனது சகோதரனுக்கு ராக்கி கட்டிவிட பிறந்த வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று அனிதா கூறியதை அடுத்து கணவன்,மனைவிக்கு இடையே வாக்குவாதம் வெடித்துள்ளது.

இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவன் ராகுல் அனிதாவின் மூக்கை அறுத்துள்ளார்.

இரத்த வெள்ளத்தில் கிடந்த அனிதாவை ராகுலின் சகோதரன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.தீவிர சிகிச்சைக்குப் பின் ஆபத்தான கட்டத்தை கடந்த அனிதா, கணவன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளதாக கூறப்படுகின்றது. தாய் வீட்டுக்கு செல்ல வேண்டுமென கூறியதால் மூக்கை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here