குருநாகல் புகையிரத நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள அரச வங்கிக்கு சொந்தமான தானியக்கி பண பரிவர்த்தனை(ATM)நிலையமொன்றில் இருந்து சிலரால் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (04) காலை 9.30 மணி முதல் 10.00 மணிக்கிடைப்பட்ட நேரத்தில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஏடிஎம் இயந்திரத்தை புதுப்பிப்பதற்காக வந்தவர்கள் எனத் தெரிவித்த கொள்ளையர்கள் அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அண்மையில் கம்பளையில் உள்ள தனியார் வங்கியொன்றின் ஏ,ரி.எம். இயந்திரத்தில் குறிப்பிடப்படாத தொகையொன்றை திருடர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக கம்பளை காவல்துறையினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.