மஸ்கெலியா – சாமிமலை பெயார்லோன் தோட்டம் மயில்வத்தை பிரிவில் நேற்று மாலை ஏற்பட்ட மினி சூறாவளியால் ஐந்து வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், சிறுவர்கள் உட்பட 16 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இதனால் பாதுகாப்பற்ற மற்றும் உயரமான மரங்களுக்கு கீழ் இருப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸார் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேற்படி பகுதியில் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டது