மத்திய மாகாண சபை உறுப்பினர் இரா.ராஜாராம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வீ.எஸ்.இராதாகிருஸ்ணன் அவர்களின் கிராமிய உட்கட்டமைப்பு விசேட வேலை திட்டத்தின் கீழ் மஸ்கெலியா,சீட்டன் (எக்கோஸ்லன் ) பிரிவு விளையாட்டு மைதான அபிவிருத்திக்காக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு மாகாண சபை உறுப்பினரால் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந் நிகழ்வில் முன்னால் அம்பகமுவ பிரதேச சபை தலைவர் திரு.நகுலேஸ்வரன் ,மலையக மக்கள் முன்னணியின் மஸ்கேலியா அமைப்பாளர் திரு.ஆனந்தன்,நோர்வுட் அமைப்பாளர் திரு.சசி சதீஸ் காரியாலய உத்தியோகஸ்த்தர்கள்,தோட்ட சிரேஸ்ட்ட உதவி முகாமையாளர்,டி4டி அமைப்பின் முகாமையாளர் திரு.விக்னேஸ்வரன் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அமைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டதோடு தரம் ஐந்து புளமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அப்பிரதேச ஐந்து மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து கெளரவிக்க பட்டனர்.