மாணவர்களுக்கு ‘பைசர்’ தடுப்பூசி ஏற்றும் பணி நோர்வூட் பகுதியில் முன்னெடுப்பு.

0
310

13 – 17 வயது பிரிவு மாணவர்களுக்கு ‘பைசர்’ தடுப்பூசி ஏற்றும் பணி நோர்வூட் பகுதியில் இன்று (29.07.2022) முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் நோர்வூட் பிரதேசத்தில் உள்ள முதலாம் கட்ட கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி (29.07.2022) இன்று வழங்கப்பட்டது.

சுமார் 04 பாடசாலைகளைச் சேர்ந்த மேற்படி மாணவர்களுக்கு நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் வைத்து காலை 9 மணி முதல் 11 மணிவரை தடுப்பூசி ஏற்றப்பட்டது.

நாட்டில் தற்போது கொரோனாவின் தாக்கம் மீளஎழுச்சி பெற்றுள்ள நிலையில் மாணவர்களுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்பட்டமை சிறந்த செயலாக காணப்படுவதாக ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களும் தெரிவித்தனர்.

மாணவர்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தமை குறிப்பிடதக்கது.

க.கிஷாந்தன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here