மாமியார் மருமகனுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம்; இறுதியில் மாமியாரை போட்டுத்தள்ளிய மருமகன் !!

0
14

நுவரெலியாவில் வாய்ர்த்தர்க்கம் கடும் மோதலானதில் மாமியாரை மருமகன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் நுவரெலியா வலப்பனை, கலங்கவத்தை பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் 59 வயதான டப்ளியூ.ஜி.ரணசிங்க என்ற பெண்ணே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முக்குனகாபிட்டிய கலங்கவத்தை பகுதியில் உலக உணவுத் திட்டத்தின் நிவாரண பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. அதனை பெற்றுக்கொள்ள மகள், மருமகன், மாமி ஆகிய மூவரும் வந்துள்ளனர்.

அங்கு ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது. அதன்போதே, மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தால், 27 வயதான மருமகன், மாமியாரை தாக்கியுள்ளார்.

அதேவேளை சம்பவத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாமியார் அங்கேயே உயிரிழந்தார்.

இந்நிலையில் பிரேத பரிசோதணைக்காக ரிகலகஸ்கட பிரதேச வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்த பொலிசார், சம்பவம் தொடர்பில் மருமகனை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here