மெலிண்டாவை மீண்டும் திருமணம் செய்ய விரும்புகிறேன்- பில்கேட்ஸ்

0
219

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான ஒருவரும் மைக்ரோசாப்ட் அதிபருமான பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா ஆகிய இருவரும் விவாகரத்து செய்த நிலையில் மீண்டும் மெலிண்டாவுடன் சேர்ந்து வாழ பில்கேட்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா ஆகிய இருவருக்கும் திருமணமாகி 27 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் சமீபத்தில் தனது மனைவியை அவர் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. எனவே இருவரின் விவாகரத்தும் இறுதி செய்யப்பட்டது.

திருமண பந்தத்தில் இருந்து மட்டுமே விலகுவதாகவும் ஆனால் அதே நேரத்தில் பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா அறக்கட்டளை மூலம் தொண்டுப் பணிகளில் இருவரும் இணைந்து செயலாற்ற முடிவு செய்ததாகவும் ஏற்கனவே இருவரும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

உலகில் உள்ள அனைத்து நாடுகளின் மக்களும் சுகாதாரமாக வாழ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள் என்றும் அதற்காக தாங்கள் இருவரும் இணைந்து தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் ஆனால் அதே நேரத்தில் இனிமேலும் தம்பதிகளாக தங்களால் தொடர முடியாது என்று முடிவு செய்து பிரிய முடிவு செய்திருப்பதாகவும் அவர்கள் தங்களுடைய அறிக்கையில் தெரிவித்தனர்.

இந்நிலையில், கடந்த மே மாதம் பில்கேட்ஸ் – மெலிண்டாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந் நிலையில், சமீபத்தில், ஒரு பத்திரிக்கைக்கு பில்கேட்ஸ் ஒரு பேட்டி அளித்துள்ளார்.

அதில், ”மெலிண்டாவை நான் பிரிந்தாலும்,அவரும் இன்னும் வேறு திருமணம் செய்யவில்லை. நானும், வேறு திருமணம் செய்யவில்லை. நான் மீண்டும் மெலிண்டாவை திருமணம் செய்ய விரும்புகிறேன். இதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். அவர் மீது நான் இன்னும் பாசத்துடன் இருக்கிறேன். அவருடன் ஒன்றாக வாழ முடிந்தால் மகிழ்ச்சி அடைவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு மெலிண்டா தரப்பில் இன்னும் எடந்த பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here