மொஹமட் பைசலின் சகோதரர் கைது!

0
33

தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசலின் சகோதரர், விபத்து தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (14) காலை, கொஸ்வத்த – ஹல்ததுவன பிரதேசத்தில், பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசல், பாராளுமன்றத்திற்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, பாராளுமன்ற உறுப்பினரின் கார் வீதியை விட்டு விலகி எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்தார்.

வாகனத்தின் சாரதியான பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரர் கொஸ்வத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here