யார் பேச்சும் கேட்காத அமைச்சர்; காதோடு கதை சொல்லும் இருவரின் கதை மட்டுமே கேட்பாராம்?

0
119

அந்த மலையகத்தை சேர்ந்த  அந்த   அமைச்சர்  பத்திரிகை மற்றும் சமூக வளையத்தளங்களில் வரும் செய்திகளை பார்ப்பது குறைவாம், அவரைப்பற்றி வரும் செய்திகளை கூட அவருக்கு சொல்லி அவரை உற்சாகப்படுத்துவது அவரது அமைச்சில் இருக்கும் அவருக்கு பக்கபலமாக இருக்கும் அந்த முன்னாள் விஜயமான ஊடகர்தானாம்? அவர் சொல்லி முடித்த கையோடு அடுத்த உதவியாளர் அந்த கமலமானவர் தனது பங்குக்கு மிகுதி கதைகளை இல்லாததும் பொல்லாததும் விடயங்களை போட்டுக்கொடுப்பதுதான் முக்கிய வேலையாம்? அமைச்சரும் அந்த கமலமானவரின் கதை கேட்பதில் மிகுந்த ஆர்வத்தில் இருப்பாராம்”.

இவர்கள் சொல்வதை மட்டும் கேட்டுக்கொண்டு காய் நகர்த்தும் அந்த அமைச்சரின் செயற்பாடு குறித்து அநேக கட்சி சார்ந்தவர்களும் அமைச்சுக்குள் அங்கம் வகிப்பவர்களும் முகம் சுழித்துக் கொண்டு இருக்கிறார்களாம்” இந்த அமைச்சரின் சில அடாவடி நடவடிக்கையின் பின்னணியில் இவர்களின் உசுப்பேத்தல்தான் காரணம் என செய்திகள் உலாவருகின்றது.

அமைச்சர் உண்மையான விடயங்களை தானே தேடி கண்டுபிடித்தால் எல்லோருக்கும் நன்மை கிட்டும் என அந்த அமைச்சின் ஊழியர் ஒருவர் கண்ணீர் மல்க கதை சொல்லி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார், அமைச்சர் முன்பை போல அடிமட்ட தொண்டர்களை கண்டு கொள்வதே கிடையாதாம், அவர் கொழும்பில் இருக்கிறாரா? அல்லது கொட்டகலையில் இருக்கிறாரா? அல்லது வெளிநாட்டுக்கு பறந்துவிட்டாரா? என்பது அமைச்சின் செயலாளருக்கே சில சமயம் தெரிவதே இல்லையாம்? அடிக்கடி ஜீரண கோளாறு காரணமாக அவதியுறும் அமைச்சர் திடீரென மிஸ்ஸிங்” ஆவதுதான் அதிகமாம்?

மற்றவர்கள் சொல்லும் ஆலோசனைகளை கேட்பதைவிட நான் சொல்வதை கேள்” என்ற பாணியில்தான் இப்போதெல்லாம் எகிறி குதிக்கிறாராம், பதவிக்கு முன்னர் இருந்த அந்த பக்குவம் இப்போது இவரிடம் இல்லை என சம்பந்தப்பட்டவர்கள் புலம்புவதை கேட்க முடிகிறது.

நாரதன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here