யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. வவுனியாவை சேர்ந்த குறித்த மாணவன் யாழ். பலாலி வீதி, கந்தர்மடம் சந்தி பகுதியிலுள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்தார்.
இந்நிலையில், குறித்த வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில், மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.