தமிழக முதல்- அமைச்சராக பதவியேற்ற தமிழக வெற்றி கழக (TVK) தலைவர் ஜோசப் விஜய் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் சற்று முன்னர் பதவியேற்றுக் கொண்டார்.
சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்திற்கு வருகை தந்த கவர்னர் ராஜேந்திர அர்லேக்கரை பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
வெள்ளை சட்டை, கருப்பு கோட், கருப்பு பேன்ட் அணிந்தபடி முதல்வர் விஜய் இந்த நிகழ்விற்கு வருகை தந்திருந்தமை சிறப்பம்சமாகும்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றது. அவருக்கு ஆட்சி அமைப்பதற்கு தேவையான அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில், முதன் முதலில் ஆதரவு கரம் நீட்டியது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் தான்.




