லசித் மாலிங்கவின் கவனத்தை பெற்ற ஒன்பது வயது சிறுவனின் ஆசை

0
130

லசித் மாலிங்கவின் பெறுமதியை முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான சம்பக்க ராமநாயக்க அங்கீகரித்தார்.
சமீபத்தில், உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான லசித் மாலிங்கவை போலவே சிறுவன் ஒருவன் பந்துவீசுவது போன்ற காணொளி சமூக வலைதளங்களில் பரவி, லசித் மாலிங்கவின் கவனத்தை ஈர்த்தது.

லசித் மாலிங்க தனது முகநூல் கணக்கில் இந்த சிறுவனைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் தமக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.

சில நிமிடங்களில் இந்த சிறுவன் பற்றி தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்தன.

அந்தத் தகவலின்படி, ஒன்பது வயதான தினேத் அனுஹாஸ் என்ற இந்த சிறுவன் வீரவில குடகம்மன 19 பகுதியில் வசிப்பதாகவும், வீரவில எதுநாடவல ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்பதாகவும் தெரியவந்துள்ளது.

இது குறித்து தினேத் அனுஹாஸ் கருத்து தெரிவிக்கையில்,

“முதலில் கையை உடைத்து பந்துகளை வீசினேன். பிறகு மீண்டும் மீண்டும் பந்துகளை வீச பயிற்சி செய்தேன். எனக்கு லசித் மாலிங்க மாமாவை பார்க்க மிகவும் பிடிக்கும். எனக்கு லெதர் பந்தில் விளையாடுவது பிடிக்கும்.” என குறிப்பிட்டுள்ளார்.

1999 ஆம் ஆண்டு, மென்பந்தாட்டத்தில் தனது திறமைகளை வெளிப்படுத்திக்கொண்டிருந்த லசித் மாலிங்கவின் பெறுமதியை முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான சம்பக்க ராமநாயக்க அங்கீகரித்தார்.

அப்போது மலிங்காவுக்கு 16 வயது.

அன்றிலிருந்து, லெதர் பந்தின் மூலம் மணிக்கு 135 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பந்துவீசக் கூடிய மாலிங்க, கிரிக்கெட் மைதானத்தை விட்டு வெளியேறும் நேரத்தில் உலகப் போற்றுதலுக்குரிய வீரராக மாறிவிட்டார்.

சம்பக்க ராமநாயக்க அவரது திறமைகளை அடையாளம் கண்டு அவரை முன்னோக்கி அழைத்துச் செல்லாமல் இருந்திருந்தால், இன்று உலகப் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் பிறந்திருக்க மாட்டார்.

எனவே லசித் மாலிங்கவும், தினேத் அனுஹாஸின் திறமையின் தனித்துவத்தைக் கண்டு அவர் மீது ஆர்வமாக உள்ளனர்.

தற்போது அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ள லசித் மாலிங்க, நாடு திரும்பியதும் தினேத்தை சந்திப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here