லா எடம்ஸ் ஹோட்டல் மண்டபத்தில் ‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எமது உரிமைகளைப் பாதுகாப்போம் வேலைத்திட்டம்

0
131

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்துள்ள ‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எமது உரிமைகளைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் ஹட்டன் லா எடம்ஸ் ஹோட்டல் மண்டபத்தில் இன்று 06.03.2023 திகதி நடைபெற்றது.
இந்நிகழ்வில் அரச திணைக்களங்களிலிருந்து தகவல்கள் பெறும் போது கையாள வேண்டிய நடைமுறைகள் தகவல் பெறும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தகவல் அறியும் சட்டத்தை ஒருவர் தவிர்க்கும் பட்சத்தில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாகவும் தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்தி பொது மக்களுக்கு பாரிய அளவில் சேவையாற்றலாம் என்பது தொடர்பாகவும் தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்தும் நாடுகள் இந்த சட்டத்தை பயன்படுத்தி நாட்டு சுதந்திரமாகவும் ஜனநாயக வழியில் வாழ வழி செய்யப்பட்டுள்ளதாக இங்கு வலியுறுத்தப்பட்டது.

இந் நிலையில் தகவல் அறியும் ஆணைக் குழுவின் ஆணையாளர்களான ஜே.எல்.ஆரச்சி.கே.பி.ஜயவர்தன.ஏ.மொஹமட் நயிஹா ஊடகவியலாளர்கள் சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here