வடகொரியாவில் சிவப்பு நிற லிப்ஸ்டிக் பயன்படுத்தத் தடை

0
64

வடகொரியாவில் சிவப்பு நிற லிப்ஸ்டிக் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடகொரியா நாட்டின் ரகசியங்கள் அவ்வளவு எளிதில் வெளிவருவதில்லை. அதுமட்டுமின்றி கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் அங்கே கடுமையானது என்று சொல்லப்படுவதும் உண்டு. இப்படி, பல வினோத கட்டுப்பாடுகள் இருக்கும் வடகொரியாவில், தற்போது புதிய கட்டுப்பாடு ஒன்று விதிக்கப்பட்டிருப்பதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதாவது, வடகொரிய பெண்கள் சிவப்பு நிறத்தில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிறம் வரலாற்றுரீதியாகக் கம்யூனிசத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தாலும்கூட, அது முதலாளித்துவத்தின் அடையாளமாக இருக்கிறது என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உணர்கிறாராம். அதனால்தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், சிறப்பு நிறத்தில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ளும் பெண்கள் மிகவும் கவர்ச்சியாக இருப்பதாகவும், அது எளிமையையும் அடக்கத்தையும் மீறுவதாகவும் கூறப்படுகிறது. அதனாலேயே அதிபர் கிம் ஜாங் உன் இத்தகைய உத்தரவைப் பிறப்பித்துள்ளாராம்.

தவிர, ப்ளூ மற்றும் தோல் நிறத்திலான ஜீன்ஸ், குறிப்பிட்ட ஹேர்ஸ்டைல்ஸ்களை வைக்கவும் அந்நாடு தடை விதித்துள்ளதாம். அதேநேரத்தில், இத்தகைய தடையை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் எனவும் அந்நாடு தெரிவித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here