நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட வட்டவலை தமிழ் மகா வித்தியாளயத்திற்கு அருகாமையில் உள்ள பாரிய மண் மேடு ஒன்று சரிந்து விழுந்து 03 நாட்கள் கடந்துள்ள நிலையில் குறித்த பாடசாலையின் நிலமை குறித்து அட்டன் வலயகல்வி பணிமனையின் அதிகாரிகள் எவரும் சென்று பார்வையிட இல்லையெனவும் இதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவில்லையென பெற்றோர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
எனவே குறித்த வட்டவலை தமிழ் மகா வித்தியாளயத்திலே ஆரம்பபிரிவிற்கான தரம் 01ல் தொடக்கம் 05 வரையான வகுப்புகளுக்கான வகுப்பறைகள் ஒதுக்கபட்டுள்ள பகுதியிலே இந்த மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கினறனர்.
இதேவேலை இந்த பாடசாலையின் வளாகத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக தரம் 01 தொடக்கம் 05 வரையான மாணவர்ளை மண்சரிவு அச்சத்தின் காரணமாக பெற்றோர்கள் தமது பிள்ளைகளை காலை வேலையில் நேரத்துடன் தமது வீடுகளுக்கு அழைத்து செல்லபடுவதாக பெற்றோர்கள் மேலும் தெரிவித்தனர்
(பொகவந்தலாவ நிருபர்.எஸ்.சதீஸ்)