உரிமம் பெற்ற சில வணிக வங்கிகள் இன்று (12) அமெரிக்க டொலரின் விற்பனை விலையை 380 ரூபாவாக நிர்ணயித்துள்ளன.டொலரின் கொள்முதல் விலை 365 ரூபாவாக பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்னமும் 374 ரூபா 99 சதமாகவே உள்ளது. அதன் கொள்முதல் விலை 361 ரூபா 72 சதமாக காணப்படுகிறது.