வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம்.சட்டபூர்வமான ஆதாரம் உண்டென்கிறார் வேலு யோகராஜ்.

0
7

தற்போது கந்தப்பளை காணி பிரச்சனை தொடர்பில் பல வதந்திகள் பரவி வருகின்றன.அதேசமயத்தில் பரப்பப்பட்டும் வருகின்றன. அவை அனைத்திலும் உண்மைத்தன்மை கிடையாது அனைத்தும் பொய் அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் நுவரெலியா பிரதேச சபை தலைவருமான வேலு யோகராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் கந்தப்பளையில் மட்டுமல்ல முழு நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பிரதேச சபை தலைவர் என்ற ரீதியிலும் மக்கள் பிரதிநிதி என்ற வகையிலும் பல வேலைத்திட்டங்களை செய்துள்ளேன்.மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருக்கின்ற பட்சத்தில் அதை வீணாக்கும் வகையில் இவ்வாறு காணி ஊழல் எனும் பொய் புரளிகளை தற்போது பரப்பி வருகின்றனர்.

அவ்வாறு பரப்பபட்டவருக்கு எதிராக பொலிசீல் முறைப்பாடு செய்துள்ளேன்.அதே சந்தர்ப்பத்தில் ஐந்து கோடி ரூபாய் நஸ்ட ஈடும் கோரியுள்ளேன்.மேலும் மனித உரிமை ஆணையகத்தையும் நாடவுள்ளேன்.

மக்கள் பிரதிநிதி என்ற வகையில் முழுமையான மக்களுக்கு பயனுள்ள வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றேன்.கந்தப்பளை காணி விடயம் தொடர்பில் அனைத்து ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ளதோடு இவ்வாறான வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாமென இ.தொகாவின் உப தலைவரும் நுவரெலியா பிரதேச சபை தலைவருமான வேலு யோகராஜ் தெரிவித்துள்ளார்.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here