வரிவிதிப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹட்டனில் வங்கி ஊழியர்கள் மற்றும் வைத்தியர்கள் இன்று (08) ஹட்டன் மக்கள் வங்கிக்கு முன்னால் உள்ள ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வரிவிதிப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு முழுவதிலும் உள்ள அரச மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் வங்கிகளை மூடி ஆர்ப்பாட்டத்திலும் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுப்பட்டனர்.
ஹட்டன் நகரில் உள்ள தனியார் மற்றும் அரச வங்கி ஊழியர்கள் ‘வரிபாரம் வானளவு ஊழியர்கள் நடு வீதியில|;,’மக்களுடை வைத்தியசாலை அந்தரங்கத்தில் மக்களின் வாழ்க்கை ஆபத்தில’;,புத்தி ஜீவிகள் நாட்டுக்கு வேண்டாமா? போன்ற வாசனங்கள் எழுதிய பதாதைகளை ஏந்திய வண்ணம் கோசமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபபட்டனர்
குறித்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை வங்கி,மக்கள் வங்கி,ஹட்டன் நெசனல் வங்கி,உள்ளிட்ட பல வங்கிகளை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் வைத்தியர்கள் இந்த ஆர்;ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தன.
ஆர்ப்பாட்ட காரர்கள் சுமார் ஒரு மணித்தியாலம் வரை ஆர்ப்பாட்டத்தினை செய்து விட்டு மீண்டும் களைந்து சென்றனர்
மலைவாஞ்ஞன்