வற் வரி திருத்தம் குறித்து 11ம் திகதி விவாதம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வற் வரி திருத்தம் குறித்த இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றில் ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி விவாதம் செய்யப்பட உள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11.30 முதல் மாலை 6.30 வரையில் விவாதம் நடத்தப்பட உள்ளதாக நாடாளுமன்ற பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த இந்த உத்தேச சட்டமூலம் இதற்கு முன்னர் ஓர் நாளில் விவாதம் செய்யப்படவிருந்தது.
நாடாளுமன்றில் இந்த உத்தேச சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டதன் பின்னர், வற் மீளவும் அமுல்படுத்தப்பட உள்ளது.
வற் வரி உயர்விற்கு உச்ச நீதிமன்றம் தற்போது இடைக்கால தடை விதித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.