வானுயர்ந்த மரங்களை வெட்டியகற்றி காசல்ரி வாழ்மக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்கும் மு.இராமச்சந்திரன்!!

0
135

அனர்த்தத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் வளர்ந்திருக்கும் மரங்களை வெட்டி அகற்றி காசல்ரி கடை வீதி வாழ் குடியிருப்பாளர்களின் உயிர் அச்சத்தை போக்க நோர்வூட் பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் மு.இராமச்சந்திரன் தெரிவித்தார்நோர்வூட் பிரதேசசபையின் ஜுன் மாதந்திற்கான மாதாந்த பொதுக்கூட்டம் புளியாவத்தை கலாசார மண்டபத்தில் 25.06.2018 காலை 10மணிக்கு இடம்பெற்றது.

உப தவிசாளர் தங்கராஜ் கிசோக்குமார் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்

காசல்ரி நீர்தேக்க கரையோரத்தை அன்மித்து வாழும் காசல்ரி கடை வீதி வாழ் மக்கள் தமது குடியிருப்புகளுக்கு மிக அண்மித்த பகுதியில் நீண்டு வளர்ந்து காணப்படும் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான 50 வருடம் பழமை வாய்ந்த கருப்பன் தேயிலை மரங்களினால் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் காணப்படும் மரங்களை வெட்டி அகற்றுவது தொடர்பில் பிரதேச கிராம சேவகரினூடாக எழுத்து மூலமாக அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கும் நுரெலியா மாவட்ட அனர்த்த முகமைத்துவ மத்திய நிலையத்திற்கு அறிவித்த போதிலும் அந்த மரங்களை வெட்டி அகற்றுவதற்கான நடவடிக்கையை இதுவரையில் முன்னெடுக்கவில்லை.

எனவே அச்ச நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் காசல்ரி கடை வீதி வாழ் குடியிருப்பாளர்களின் நலன் கருதி உடனடியாக குறித்த மரங்களை வெட்டிஅகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here