விஜய்யின் சூப்பர் ஹிட் படம் கில்லியின் ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

0
179

நடிகர் மகேஷ் பாபு ஆந்திர சினிமாவின் விஜய் என அழைக்கப்படுபவர். அதே போல அவர் நடித்த சில படங்களை தமிழில் விஜய் ரீமேக் செய்து பெருவெற்றிகளைப் பெற்றுள்ளார். அந்த வகையில் மகேஷ் பாபுவின் ஒக்கடுதான் தமிழில் விஜய் நடிப்பில் கில்லியாக உருவானது.

தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன இந்த திரைப்படம் தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அதற்கு முக்கியக் காரணம் படத்தை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு மாற்றியிருந்தார் இயக்குனர் தரணி. 2004 ஆம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூலை செய்த படமாக கில்லி அமைந்தது. இந்த படத்தின் மூலம்தான் முதலாக த்ரிஷா விஜய் வெற்றிக் கூட்டணி அமைந்தது.

இந்த நிலையில் இந்த படம் வெளியாகிய 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த படத்தை தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் ரி ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இப்போது கில்லி திரைப்படம் ஏப்ரல் 20 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கபப்ட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here