விஜய் ஆண்டனி மகள் எழுதிய உருக்கமான கடிதம் : மனதை நெருட வைக்கும் வரிகள்

0
20

பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா எழுதிதாக ஊகிக்கப்படும் பத்து வரிகள் கொண்ட கடிதம் மீட்கப்பட்டுள்ளது.அந்த கடிதத்தில் ‘ஐ லவ்யூ ஓல். மிஸ் யூ ஓல்’ (I love You All, I Miss You All) என்று எழுதப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தனது நண்பர்களையும், ஆசிரியர்களையும் மிஸ் செய்வேன், நான் இல்லாமல் எனது குடும்பம் தவிக்கும், நானும் தவிப்பேன் என்றும் எழுதப்பட்டுள்ளது.

இவர் நேற்று அதிகாலை 3 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின.

மீராவின் உடல் சென்னை – ஓமந்தூரார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை முடிவடைந்து அவரது பெற்றோர் விஜய் ஆண்டனி – பாத்திமாவிடம் உடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மீராவின் உடலுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இன்று(20) கீழ்ப்பாக்கத்தில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.இந்த நிலையில், மீராவின் மரணம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது ஒரு கடிதம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதம் முழுவதும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளதாகவும், இந்த கடிதம் மீரா மன அழுத்தத்தில் இருந்தபோது எழுதியதா? அல்லது தற்கொலை செய்யும் முன்பு எழுதியதா? என்பது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here