விவசாயிகளுக்கான மகிழ்ச்சியான செய்தி…..

0
132

நாட்டில் கடந்த 9 நாட்களில் நெல் சந்தைப்படுத்தல் அதிகாரசபையினால் ஐயாயிரத்து 7 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இதனிடையே உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் 1000 மெற்றிக் தொன் யூரியா உரங்கள் அடுத்த பதினைந்து நாட்களில் நாட்டுக்கு வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, உலக உணவு மற்றும் விவசாய அமைப்பினால் இலவசமாக வழங்கப்படும் ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரம் எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு நெற்செய்கை மேற்கொள்வதற்கு தலா 50 கிலோகிராம் வீதம் 3 லட்சத்து 75 ஆயிரம் யூரியா உர மூடைகளை வழங்குவதற்கு உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here